இலங்கையின் 77வது சுதந்திர தினம் இன்று 04.02.2025 அரச தரப்பினால் கொண்டாடப்பட்டது.
ஆனால், வடக்கு கிழக்கில் அந்நாள் திண்டாட்ட தினமாகவே பார்க்கப்பட்டது. தமிழ் மக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை, நிலப்பறிப்பு, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாமை, இறுதி யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டமை, சர்வதேச விசாரணை நடத்தப்படாமை, உண்மைகள் கண்டறியப்படாமை, நீதி வழங்கப்படாமை, நிரந்தரமான அரசியல் தீர்வு இல்லை போன்ற விடயங்களைக் கண்டித்து தமிழ் மக்கள் இன்றைய தினத்தினை துக்க தினமாக அனுஷ்டித்தனர்.
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை தமிழ் மக்கள் சார்பாக இப்போராட்டம் செங்கலடியிலிருந்து கொம்மாதுறை வரை நடைபவனியாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்கள் உட்பட பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.