பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி மக்கள் பேரலையுடன் 04.02.2025 இன்று ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் பேரெழுச்சியடன் ஆரம்பமான கரிநாள் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய வண்ணம் உள்ளனர்
சிறிலங்கா அரச தூதரகத்தின் முன் வானுயர ஒலித்திக்கொண்டிருக்கும் கொட்டொலிகள் மத்தியில் மாபெரும் போராட்டம் ஆரம்பித்துள்ளது.இப்போராட்டம் பிரித்தானிய மன்னர் மாளிகை நோக்கி நகரவுள்ளது. தமிழர் தாயகத்தில் கரிநாளான இன்று எழுச்சிகொண்ட மக்கள் போராட்டங்களை சிறிலங்கா அரசு நசுக்க முற்பட்ட வேளையிலும் தடைகளை உடைத்து போராட்டங்கள் நடைபெற்றுள்ள சூழமைவில், பிரித்தானியாவின் மன்னரை நோக்கிய இப்போராட்டமும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.