வாவியில் மூழ்கி காணாமல்போனவர் சடலமாக மீட்பு

102 0

கம்பஹா, பல்லேவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிதியவல வாவியில் மூழ்கி காணாமல்போன நபர் நேற்று திங்கட்கிழமை (03) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் கம்பஹா, எல்லக்கல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.

இவர் நேற்றைய தினம்  ஹிதியவல வாவியில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து காணாமல்போன நபரை தேடும் பணியில் ஈடுபட்ட போது சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

சடலமானது மீரிகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.