பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைது

95 0
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் நீர்கொழும்பு, கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தலுவகொட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 34 மற்றும் 43 வயதுடையவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் இருவரும் கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற 06 கொள்ளை சம்பவங்களுடன் , நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற 02 திருட்டு சம்பவங்களுடன் , கொச்சிக்கடை பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு திருட்டு சம்பவத்துடன், வேயன்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

சந்தேக நபர்களிடமிருந்து 02 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.