பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி, கிங்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 8 கிலோ 920 கிராம் கேரள கஞ்சா , கையடக்கத் தொலைபேசி மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்துள்ளதாக சந்தேகிக்கப்படும் 10 ஆயிரம் ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வாரியபொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.