கனடா மற்றும் மெக்சிகோ நாட்டிலிருந்த இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரியும் விதிப்பதாக ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்க பதிலடி கொடுக்கப்போவதாக கனடாவும் மெக்சிகோவும் அறிவித்துள்ளதோடு, சீனாவும் எதிராக செயற்படபோவதாகவும், உலக வர்த்தக அமைப்பில் சவால் விடுவதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் குடியேற்றத்தை தடுக்க இந்த வரி விதிப்புகள் அவசியம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் ஹொங்கொங்கின் ஹாங் செங் 0.7 சதவீதமாகவும், ஜப்பானின் நிக்கேய் 225 2.8 சதவீதமாகவும், தென் கொரியாவின் கோஸ்பி 3 சதவீதமாகவும், அவுஸ்திரேலியாவின் 200 1.9 சதவீதமாகவும் பங்கு விலைச் சுட்டெண் சரிந்தன.
சீனாவில் புத்தாண்டு விடுமுறைக்காக பங்கு சந்தைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்தது. சீனாவின் யுவானுக்கு எதிராக பெறுமதி அதிகரித்தது.
அதேவேளை, 2003 ஆம் ஆண்டு பின்னர் கனேடிய டொலரின் பெறுமதி குறைவடைந்தது.
“உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே ஒரு நீண்ட மற்றும் நீடித்த வர்த்தக இடைவெளியைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு முதலீட்டாளர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது” என நிதிச் சேவை நிறுவனமான KCM வர்த்தகத்தின் தலைமை சந்தை ஆய்வாளர் டிம் வாட்டர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் வரி விதிப்பு பட்டியலில் அடுத்து எந்ததெந்த நாடுகள் இருக்கும் என முதலீட்டாளர்களுக்கு கவலை அதிகரித்துள்ளது.
ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதும் “மிக விரைவில்” வரிகளை விதிக்கவுள்ளார்.
குறுகிய காலத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு வரி விதிப்பு பயனளிக்கும் அதேவேளை, நீண்ட காலத்திற்கு அவை தாக்கத்தை ஏற்படுத்தும் என முதலீட்டு வங்கியான சாக்ஸோவின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் சாரு சனானா எச்சரித்துள்ளார்.
அதேவேளை, வரிவிதிப்பை மீண்டும் மீண்டும் அமுல்படுத்துவதால் மற்றைய நாடுகள் அமெரிக்காவை நம்புவதைக் குறைப்பதோடு, டொலரின் உலகளாவிய பங்கை பலவீனப்படுத்தும்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை நள்ளிரவில் அமலுக்கு வரவுள்ள வரிவிதிப்பு குறித்து திங்கட்கிழமை கனடா மற்றும் மெக்சிகோ தலைவர்களிடம் பேசவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

