தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் சந்தேக நபர் கைது

86 0

விற்பனைக்கு தயாராக இருந்த 101 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் (Monofilament Nets) சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று (01) கந்தளாய் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கந்தளாய், மீனவ கிராமம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் சந்தேக நபரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.