ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட பல கட்சிகளும் தற்போது இரண்டு மூன்று கட்சிகளாக பிளவுபட்டு தற்போது கட்சி பிளவுகள் ஏற்படுவது வழமையாக மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள நேற்று (30) மல்வத்து மகா விகாரைக்குச் சென்று ஆசிர்வாதம் பெற்ற சந்தர்ப்பத்திலேயே மகாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் இரு கட்சிகளின் இணைப்பு குறித்து பேசப்பட்டபோதும் அவை வெற்றியளிப்பதாக தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

