இம்புல்பே பிரதேச செயலகப் பிரிவில் இன்று (31) பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
அmந்த வகையில், பலாங்கொடை- பெலிஹுலோயா மேல் கலகம வீதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வீதியில் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இம்புல்பே பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட விஹாரவெல கிராம சேவைப் பிரிவில் பல இடங்களில் மேல் கலகம வீதி மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக இம்புல்பே அனர்த்த நிவாரண சேவை அதிகாரி அமில சம்பத் தெரிவித்துள்ளார்.
வீதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாகவும், பல இடங்களில் மரங்கள் மற்றும் பாறைகளுடன் சேர்ந்து மண் மலைகள் வீதியில் விழுந்துள்ளதாகவும் சமனல வெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்

