யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பேசப்பட்டது.மேலும் தெரியவருவதாவது..
யாழ்ப்பாணத்தில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன பிரதேச செயலக பிரிவுவாரியாக சாவகச்சேரியில் 14, நல்லூரில் 07, தெல்லிப்பழையில் 06, யாழ்ப்பாணத்தில் 03, உடுவிலில் 03 என 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன.
எனவே இந்த புகையிரத கடவைகளை பாதுகாப்பானதாக அமைக்க வேண்டும்.
அதேவேளை யாழில் நேர அட்டவணைக்கு ஏற்ப 38 புதிய பேருந்துகள் தேவையாக உள்ளன.
அந்தவகையில் யாழ்ப்பாணம் சாலைக்கு 23 பேருந்துகளும், பருத்தித்துறை சாலைக்கு 10 பேருந்துகளும், காரைநகர் சாலைக்கு 05 பேருந்துகளும் தேவையாக உள்ளன.
யாழ்ப்பாணத்தில் தற்போது வீதி விபத்துகள் அதிகரித்து காணப்படுகின்றன. யாழில் 06 வீதி சமிக்ஞை விளக்குகளே காணப்படுகின்றன.
எனவே வீதி விபத்துக்களை குறைக்க வீதி சமிக்ஞைகளை அமைக்க வேண்டும் என மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
மாவட்ட செயலரினால் பேருந்து தொடர்பில் கூறப்பட்டதற்கு, மார்ச் மாதமளவில் 10 புதிய பேருந்துகள் வழங்கவும் மேலும் 10 திருத்தி அமைக்கப்பட்ட பேருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது.

