அமெரிக்காவில் பயணிகள் விமானமும் ஹெலிக்கொப்டரும் நடுவானில் மோதி விபத்து – இதுவரை 19 பேரின் உடல்கள் மீட்பு

100 0

அமெரிக்க பயணிகள் விமானம் ஹெலிக்கொப்டருடன் நடுவானில் மோதி  வோசிங்டன் டிசியின் ஆற்றுப்பகுதியில் விழுந்து நொருங்கிய சம்பவத்தில் உயிரிழந்த 19 பேரின் உடல்களை   மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர்.

60 பயணிகள் நான்கு பணியாளர்களுடன்  விச்சிட்டா கன்சாசிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த ஜெட்விமானம் மூன்று அமெரிக்க இராணுவவீரர்கள் பயணித்துக்கொண்டிருந்த ஹெலிக்கொப்டருடன் நடுவானில் மோதியது.

விமானமும் ஹெலிக்கொப்டரும் விழுந்து நொருங்கிய பொட்மெக் ஆற்று பகுதியிலிருந்து இதுவரை 19 உடல்களை மீட்டுள்ளதாக சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடும் குளிரின் மத்தியில் மீட்பு பணிகள் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.