தமிழ் தேசிய இனத்தின் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு போராளி மாவை சேனாதிராஜா

105 0

தமிழ் தேசிய இனத்தின் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு போராளி மாவை சேனாதிராஜா என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

மாவை சேனாதிராஜாவின் பூத்தவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

மாவை சேனாதிராஜாவின் இழப்பு என்பது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்திற்குமான இழப்பாகும்.

தமிழ் தேசிய இனத்தின் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு போராளி.

மக்களுக்காக தனது வாழ்க்கையில் பல தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் செய்த ஒருவர். கட்சியை கட்டி வளர்ப்பதில் எல்லோரையும் அந்நியோன்யமாக அரவணைத்து சென்ற ஒருவர்.

அவருடைய இழப்பு என்பது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பாரிய இழப்பு என்பதுடன் அது கட்ச்சிக்கு பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

உங்களுடைய நினைவோட்டம் தமிழரசுக் கட்சி சார்ந்து எல்லாவேறுபாடுகளையும் மறந்து அவருடைய நினைவாக பிளவுகள் பிரிவுகள் இன்றி ஒற்றுமையாக முன் செல்ல வேண்டும்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியை வளர்த்து மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர வேண்டும் அது மாவை சேனாதிராஜா அவருடைய பெயராலேயே நிறைவேறவேண்டும்.

நல்ல ஆத்மா வஞ்சகம் இல்லாத உள்ளத்தை கொண்டவர். அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன் என்றார்.