மாவை சேனாதிராஜாவின் மறைவுக்காக டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தானே தேர்ந்தெடுத்த தனது அரசியல் வழியில் இறுதி வரை உறுதியுடன் இருந்தவர். ஆரம்ப காலச் சூழலில் அரச நெருக்கடிகளை அடுத்தடுத்து சந்தித்தவர்.
இளமைக்காலத்தில் சிறைகளில் அடைபட்டு இன்னல்களை எதிர்கொண்டவர். சக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தனது வழிமுறையில் குரல் எழுப்பியவர்.
ஆளுமையும் அர்ப்பணிப்பும் மிக்க மாவை அண்ணை பாரம்பரிய தமிழரசு கட்சி உறுப்பினர்களால் ஆழமாக நேசிக்கப்பட்டவர்.
எல்லோர் கனவுகளும் வெல்லும் காலம் பிறக்க உழைப்போம். இழப்பின் துயரில் வதைபடும் குடும்பத்தவர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் சகலருக்கும் ஆழ்மன ஆறுதல் என குறிப்பிட்டுள்ளார்.

கொள்கை வேறு, கோட்டை வேறாக இருப்பினும் மாவை சேனாதிராஜா அண்ணா, அரசியல் களத்தில் எம்முடன் சம காலத்தில் பயணித்தவர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.