கேகாலை, ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணகல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவி கொட்டுக்கு இலக்காகி 13 மாணவர்கள் உட்பட 19 பேர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் புதன்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.
பாடசாலை அதிபர், இரண்டு ஆசிரியர்கள், 13 மாணவர்கள் மற்றும் 03 பெற்றோர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை வளாகத்தில் உள்ள மரமொன்றிலிருந்த குளவி கூடு கலைந்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்

