கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் நாகொடை சந்தி பகுதியில் இன்று வியாழக்கிழமை (30) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.
நீர்கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை நாகொடை தேவாலய வீதியில் இருந்து வந்த கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.
இதன் போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் தூக்கி வீசப்பட்டு பலமாக அடிப்பட்டதில் கால்களில் காயம் ஏற்பட்டது.
காரின் முன் பகுதி மோட்டார் சைக்கிளுடன் இழுத்துச் செல்லப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


