முல்லைத்தீவு – மணல் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியனே எதிர்வரும் 01.02.2025 அன்று அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்திருக்கும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவுக்கு சமுகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில்,
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக கீழ் குறிப்பிடப்படும் நபரினை ஒன்று 01.02.2025ஆம் திகதி காலை 10 மணிக்கு அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்திருக்கும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவிற்கு வருகை தருமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

