அரசியல் யாப்பிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய மாகாண சபைகளுக்கு தேவையான வளத் தேவைகள் தொடர்பாகவும், மாகாண சபைகளுக்காக தேசிய பாதீட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதிக்கொடைகள் ஒவ்வொரு மாகாண சபைகளுக்கும் ஒதுக்கீடு செய்து வழங்கும் கோட்பாட்டு தொடர்பாகவும் விதந்துரைகளைச் சமர்ப்பித்தல் நிதி ஆணைக்குழுவுக்கு உரித்தளிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒவ்வொரு மாகாண சபைக்காகவும் 2025 ஆண்டின் வரவு – செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்து வழங்குவதற்காக நிதி ஆணைக்குழுவால் விதந்துரை செய்யப்படும் மீண்டெழும் மற்றும் மூலதனச் செலவுத் தேவைகள் அடங்கிய அறிக்கை மேற்குறித்த ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கும், அரசியல் யாப்பின் 154 ந (7) ஆவது உபபிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய குறித்த விதந்துரைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

