நெல் மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து ; ஒருவர் படுகாயம்

87 0

தம்புள்ளை – மஹியங்கனை பிரதான வீதியில் மாத்தளை, வில்கமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (27) மாலை இடம்பெற்றுள்ளது.

நெல் மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.