சீனப் புத்தாண்டை முன்னிட்டு அனுர வாழ்த்து செய்தி

85 0

சீனப் புத்தாண்டை முன்னிட்டு (வசந்தகால விழா) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சீன மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

இந்த பாரம்பரிய பண்டிகையானது நாளை புதன்கிழமை (29) கொண்டாடப்படவுள்ளது.

சீன மக்களின் பாரம்பரிய உடைகள், உணவுகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சாரத்தை நினைவுகூரும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

சுமார் 3,500 வருடங்கள் பழமையான இந்த பண்டிகை மூலம் சீன மக்களின் மகத்தான கலாச்சாரம் மற்றும் உணர்வுகள் எடுத்துக்காட்டப்படுகின்றன.

சீனாவில் உள்ள பல்வேறு பிரதேசங்களில் இந்த விழா கலாச்சாரத்துடன் கூடிய வகையில் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும்.

அனைத்து சீன மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.