இந்தியாவின் 76ஆவது குடியரசு தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.
யாழ்ப்பாணம் மருதடி பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
அதனை தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.





