இடைநிறுத்தப்பட்ட மீன்பிடித் துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அவதானம்

112 0

இடைநிறுத்தப்பட்ட மீன்பிடி துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து பிரான்சின் கவனத்துக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைக்கான பிரான்ஸின் பதில் தூதுவர் மேரி-நோயல் டூரிசுடனான சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார்.

2022 பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட பிரான்ஸ் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆதரவுடனான மீன்பிடி துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தை மீண்டும் தொடங்குவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்தத் திட்டம் குடாவெல்ல, பேருவளை மற்றும் புராணவெல்லவில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவற்றை பசுமை ஐரோப்பிய தரநிலைகளுக்கு ஏற்ப சீரமைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆரம்ப கலந்துரையாடல் 2017இல் தொடங்கின. அதைத் தொடர்ந்து சாத்தியக்கூறு ஆய்வுகள் முடிக்கப்பட்டு 2019இல் வழங்கப்பட்டன. 202 இல் மானிய உதவியின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க ஆய்வை நடத்த பிரான்ஸ் மேம்பாட்டு நிறுவனம் ஒப்புக்கொண்டது.

இந்த திட்டம் 2021 இல் தேசிய திட்டமிடல் துறையால் அங்கீகரிக்கப்பட்டது. மற்றும் 2021 முதல் 2026 வரை ஐந்து ஆண்டு செயல்படுத்தல் காலத்திற்கு திட்டமிடப்பட்டது. இருப்பினும், 2022 பொருளாதார நெருக்கடி காரணமாக இது நிறுத்தப்பட்டது.

மீன்வள உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் உள்ளுர் மீன்பிடி சமூகங்களை சிறப்பாக செயற்படுத்தவும் இந்த முயற்சியை மீண்டும் தொடங்குவதன் முக்கியத்துவத்தை சந்திப்பு அடிக்கோடிட்டுக் காட்டியது.

வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் மீன்பிடி துறைமுகங்களை புனரமைத்தல், ஆராய்ச்சியாளர்களுக்கான அறிவு பரிமாற்ற திட்டத்தை நிறுவுதல் மற்றும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவனத்திற்கு குறிப்பாக திமிங்கலங்கள் மற்றும் கடல் பாலூட்டிகள் தொடர்பான ஆராய்ச்சிக்கு ஆதரவை வழங்குதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை அதன் மீன்வளத் துறையை நவீனமயமாக்குவதற்கும், நாட்டின் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையுடன் ஒருங்கிணைப்பதற்கும் உதவுவதற்கான பிரான்ஸின் உறுதிப்பாட்டை பதில் தூதுவர் இதன் போது மீண்டும் வலியுறுத்தினார்.