கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் நில்மினி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (24) காலை இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பஸ் ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட நபர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

