இது தொடர்பில் தெரியவருவதாவது,
இனந்தெரியாத நபரொருவர் கடந்த 22 ஆம் திகதி மாலை 05.00 மணியளவில் காலி சிறைச்சாலையின் பின்புறத்தில் உள்ள கூரை வழியாக சிறைச்சாலைக்குள் பொதி ஒன்றை வீசி சென்றுள்ளார்.
இதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பொதியை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, இந்த பொதியிலிருந்து 07 கையடக்கத் தொலைபேசிகள், 25 புகையிலைகள் மற்றும் 02 ஹெட்செட்கள் என்பன சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்டப்டுள்ளன.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

