கிளிநொச்சியில் வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் – மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு

125 0

கிளிநொச்சி மாவட்டத்தின் நகர்புறத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் எந்தவித அனுமதியும் பொறாமல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி நகர வர்த்தகர்களின் வியாபாரத்திலும் அவர்களது வாழ்வாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வதாகவும் இதற்கான தீர்வினை பெற்றுத்தருமாறும் கோரி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு வருகை தந்து மாவட்ட பதில் அரசாங்க அதிபரை சந்தித்து மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு உரிய தீர்வினை பெற்றுத் தருவதாக கூறினார்.