2025 தமிழர் திருநாளில் பண்பாட்டுப் படையலிடும் தமிழாலயங்கள்- பாகம் இரண்டு.(காணொளி)

479 0

தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 100 மேற்பட்ட தமிழாலயங்கள் தமிழ்மொழியோடுஇ தமிழினத்தின் பண்பாட்டுப் பனுவல்களை எமது அடுத்த தலைமுறைத் தமிழர்களுக்கு ஊட்டி வருகின்றன. ஆண்டின் தொடக்கமான தை மாதத்திலே உலகை தன் சக்தியால் உய்வித்துவரும் கதிரோனின் வளம்போற்றி நன்றி செலுத்தும் பண்பாட்டுப் பெருவிழாவான தைப்பொங்கலைத் தாயகம். தமிழகம். சிங்கப்பூர். மலேசியா உட்படத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளெங்கும் கொண்டாடிவருகின்றனர்.