தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தோட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 2025ம் ஆண்டிற்குள் 4350 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது அத்துடன் பெருந்தோட்ட மக்களின் உள்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து அவர்களை வறுமை நிலையில் இருந்து மீட்டெடுப்பது அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தோட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை தங்களது அரசியல் நட்பு வட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது எனவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இப் புதிய வீடுகள் தோட்டப் புறங்களில் வாழும் உரிய பயனாளிகளுக்கு மாத்திரம் வழங்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கத்தினால் குத்தகைக்கு விடப்பட்டுள்ள பெருந்தோட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் 21 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனை தெரிவித்திருந்தார்.

