நோயாளிகளை கடும் தொனியில் பேசிய வைத்தியர்

93 0
பெண் வைத்தியர் ஒருவர் கடும் தொனியில் அநாகரீகமாக பேசிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த காணொளியில் நோயாளிகள் வைத்தியரை காண வந்துள்ளார்கள். இந்நிலையில், ஒருவர் வைத்தியர் இருக்கும் அறைக்குள் நுழைய முயல்கின்றார். வைத்தியர் கடும் தொனியில் அநாகரீகமாக பேசுகிறார். ” உங்களுக்கு நுள்நுழைய அழைக்கப்படும் வரை நுழைய வேண்டாம், இல்லையெனில், நான் எந்த நோயாளிகளையும் சந்திக்க மாட்டேன்” என கூறி நோயாளிகளை விரட்டி அடிக்கிறார்.

இந்த சம்பவத்தை காணொளியாக ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள நிலையில் அது வைரலாகி வருகிறது.