மருதானை பொலிஸ் சிறைக்கூண்டில் உயிரிழந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

70 0

கொழும்பு,மருதானை பொலிஸ் நிலைய சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.

வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று செவ்வாய்க்கிழமை (21) மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு  பொலிஸ் நிலைய சிறைக்கூண்டில்  தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளார்.

இதன்போது, இந்த பெண் இன்றைய தினம் அதிகாலை 04.00 மணியளவில் பொலிஸ் நிலைய சிறைக்கூண்டினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.