அத்துருகிரிய – கொடகம வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
கொடகமவிலிருந்து அத்துருகிரிய நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த முதியவர் ஒருவர் மீது மோதி பின்னர் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய முதியவர் ஆவார்.
இதனையடுத்து,காரின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

