புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு புகையிலைகளை கொண்டு சென்றதாக கூறப்படும் பெண் ஒருவர் திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபரான பெண் புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரைப் பார்ப்பதற்காக சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.
இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான பெண் கொண்டு வந்த பொதியினுள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புகையிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைகளுக்காக பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ.திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

