அதன்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 81 யானைகளும், மின்சாரம் தாக்கி 56 யானைகளும், ரயிலில் மோதி 11 யானைகளும், நீரில் மூழ்கி 10 யானைகளும், கிணற்றில் தவறி விழுந்து 07 யானைகளும், யானை வெடி வெடித்ததில் 51 யானைகளும் உயிரிழந்துள்ளன.
இளம் வயதுடைய யானைகளே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், யானைகளின் தாக்குதல்களினால் 154 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2023 ஆம் ஆண்டில் 488 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

