பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழ் தேசிய பண்பாட்டு உணர்வோடு கலை பண்பாட்டுக்கழகத்தின் பொங்கல் விழாவானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு பொங்கல் விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பின் கீழ் இயங்கி வரும் பிரிவுகளான
வட மேற்கு,வட கிழக்கு ,தென் மேற்கு,தென் கிழக்கு,வெளிமாவட்டம்,மகளிர்,பாதுகாப்பு,ஊடகம்,கலை,இளையோர் ,நிதி,அரசியல் ,விளையாட்டு,கல்வி,தளிர்கள்,மக்களவை,துயிலும் இல்லம்,வெளியீடு,தொழில்நுட்பம்,மாவீரர்பணிமனை
இருபது பிரிவுகளும் தமக்கான பொங்கல் பானைகள் வைத்து சிறப்பாக விழாவினை எடுத்துச் சென்றார்கள்.
தொடர்ந்து நடன நிகழ்வுகளும்,வீரமா,மானமா என்ற தலைப்பில் பட்டிமன்ற நிகழ்வும், சிறப்பு உரையும் , தொடர்ந்து வான வேடிக்கைகளும் நடைபெற்று தமிழீழ தேசியக் கொடி கையேந்தலுடன் பொங்கல் விழா சிறப்புற நிறைவடைந்தது.