கல்கிசையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்; துப்பாக்கிதாரி கைது!

76 0

கொழும்பு கல்கிசை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தின்போது ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, துப்பாக்கிச் சூடு மேற்கொண்டவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.