கொழும்பு துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்கம்பத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளர்கள் மீது மின்கம்பத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 58 வயதுடைய மடபாத பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த விபத்தில் இரண்டு தொழிலாளர்களும் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

