மின்னேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரணை – பொலன்னறுவை வீதியில் மின்னேரியா இராணுவ முகாமுக்கு அருகில் நேற்று சனிக்கிழமை (18) மோட்டார் சைக்கிளொன்று இராணுவ கெப் வண்டியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தியபெதும பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்பதோடு அவர் மின்னேரியா பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆவார்.
ஹபரணையில் இருந்து மின்னேரியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்த் திசையில் வந்த இராணுவ கெப் வண்டியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து ஹிகுரக்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
சடலம் ஹிகுரக்கொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

