பணயக்கைதிகள் விடுதலை குறித்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி வழங்கினால் அரசாங்கத்தை கைவிடப்போவதாக அவர் எச்சரித்துள்ளார்.
நான் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவை நேசிக்கின்றேன் அவர் தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பதை உறுதி செய்வேன் என தெரிவித்துள்ள அவர் எனினும் ஹமாசுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை பேரழிவை ஏற்படு;த்தும் என்பதால் நான் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவேன் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை தங்கள் கரங்களில் குருதியை கொண்டுள்ள ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளை விடுதலை செய்யகின்றது என தெரிவித்துள்ள அவர் விடுதலையானவுடன் அவர்கள் உடனடியாக யூதர்களை கொலை செய்ய முயல்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
ஹமாசுடனான உடன்படிக்கை ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் காசாவிற்கு மீண்டும் வருவதற்கு உதவுகின்றது என தெரிவித்துள்ள இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் ஹமாசின் நோக்கமே இஸ்ரேலியர்களை கொல்வது என தெரிவித்துள்ளார்.
நாங்கள் பெரும் குருதி சிந்தி பெற்ற யுத்த வெற்றியை இந்த உடன்படிக்கை இல்லாமல் செய்கின்றதுஇஎன தெரிவித்துள்ள இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டவுடன் இஸ்ரேலிய இராணுவத்தினர் மீண்டும் மோதலை ஆரம்பித்தால் அரசாங்கத்துடன் இணைவேன் என குறிப்பிட்டுள்ளார்.

