மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை

16 0

முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன் நாணயக்காரவை பிணையில் விடுவிக்க, கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, தலா 100 இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெதர்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 300 இலட்சம் ரூபாவை மோசடி செய்த திசர இரோஷன் நாணயக்கார, கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி கைது செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது