‘அம்பயாலு’ (உற்ற நண்பர்) என்ற பெயரைக்கொண்ட இச்சுற்றுலா ஹோட்டல் திறப்பு விழாவில் இலங்கையிவுள்ள பல வௌிநாட்டுத்தூதுவர்களும் அரச உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஹோட்டலில் இடம்பெற்ற பிரித் ஓதும் சமய நிகழ்விலும் பிக்குனிகள் மட்டும் கலந்து கொண்டுள்ளதுடன் இதில் பெண்களால் சகல பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
இப் புதிய மகளிர் ஹோட்டலில் அனைத்து வேலைகளையும் பெண்களே செய்வது சிறப்பு வாய்ந்தது என்று அழைக்கப்பட்ட விருந்தினர்கள் பலர் தெரிவித்தனர்.
அனுராதபுரத்தைச் சேர்ந்த கௌசல்யா படகொட, என்பவர் தலைமை சமையல்காரராக நியமிக்கப்பட்டுள்ளார். தெற்காசியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தலைமை சமையல்காரராக பெண் ஒருவர் இருப்பது இதுவே முதற் சந்தர்ப்பமாகும்.

