கார் மோதி இரண்டு எருமை மாடுகள் உயிரிழப்பு!

127 0

தெற்கு அதிவேக வீதியில் 178.5 ஆவது கிலோமீற்றர் மைல்கல்  அருகில் கார் மோதி இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கார் ஒன்று வீதியில் பயணித்த நான்கு எருமை மாடுகள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இரண்டு எருமை மாடுகளும் படுகாயமடைந்துள்ளன.