தமக்கு தேவை ஏற்பட்டிருந்தால் கொழும்பை சுற்றிவளைத்து இலங்கையை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான இயலுமை தமக்கு இருந்தாக அமைச்சர் பீள்மாசல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பேலிகொடையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொழிட்சங்கங்களின் ஊடாக நாட்டின் அத்திய அவசிய சேவைகளை வீழ்ச்சிக்கு உட்படுத்தி அரசாங்கத்தை கவிழ்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன.
அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதனை தடுப்பதற்கு தயாராக வேண்டும் என்ற நிலைபாட்டில் ஜனாதிபதி இருக்கிறார்.
அதற்கான பொறுப்புக்களை தம்மால் ஏற்கமுடியுமா? என்ற விவதாம் அமைச்சரவையில் ஏற்பட்டது என சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் சரத் பொன்சேகாவிற்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்படுகின்ற பட்சத்தில் அது கடந்த காலத்தை போன்றே வெள்ளை வான் கலாச்சாரத்தை உருவாக்கும் என ஊடக வியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் வழங்கிய அவர் தர்மத்தை மீறி, கடந்த காலத்தில் கொழும்பை சுற்றி வலைத்து இலங்கையை கைப்பற்றுவதற்கான அதிகாரங்கள் தமக்கு இருந்ததாக சரத் பொன்சேகா தெரிவித்தார்.

