சிவனொளி பாதமலைக்கு புனித யாத்திரை சென்று திரும்பி கொண்டிருந்த பெண்மணி, ஞாயிற்றுக்கிழமை (12) காலை 10 மணியளவில் திடீரென சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது சடலம் தற்போது மஸ்கெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹெய்யந்துடுவ. மஹாவியைச் சேர்ந்த குருப்பு ஆராச்சிகே கெருதத்தி (வயது 61) என்பவரே மரணமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2024/2025 சிவனொளி பாதமலை பருவகாலம் தொடங்கியதில் இருந்து இரண்டாவது மரணம் சம்பவித்ததுள்ளது

