விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அருகில் பாரிய கசிப்பு தயாரிப்பு! – முற்றுகையில் சந்தேக நபர்கள் கைது!

129 0
தெல்தெனிய விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அருகே மறைவான பகுதிகளில் மிகப் பாரியளவில் சட்டவிரோத மது மற்றும் கசிப்பு தயாரிக்கும் இடத்தை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை (11) முற்றுகையிட்டனர்.

இந்த சுற்றிவளைப்பின்போது தப்பியோட முயற்சித்த சந்தேக நபர்களை அதிகாரிகள் கைது செய்ததுடன் 4 இலட்சம் மில்லி லீட்டர் வரையான கோடா, 50 பீப்பாய்கள், சீனி, இரும்புச் சுருள்கள், கசிப்பு வடிகட்டி போன்றவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இங்கு தயாரிக்கப்பட்டு வந்த சட்டவிரோத கசிப்பு தெல்தெனிய, திகன, பலகொல்ல, மெனிக்கின்ன, பல்லேகெலே, ரஜவெல, ஹாரகம, வலப்பனை உட்பட பல இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்ததாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.