துப்பாக்கியுடன் ஒருவர் கைது

99 0

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் சனிக்கிழமை (11) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 9 மில்லி மீட்டர் ரக துப்பாக்கி, அதற்கு தேவையான 13 ரவைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் 10 கிராம் 800 மில்லி கிராம், அந்த போதைப்பொருளை நிறுக்கும் இலத்திரனியல் தராசு மற்றும் அலைபேசியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீதொட்டமுல்லையை சேர்ந்த 42 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.