புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

115 0

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நியமித்துள்ளார்.

இதற்கமைவான நியமனக் கடிதம்  ஜனதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால், மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவுக்கு வெள்ளிக்கிழமை (10) வழங்கப்பட்டது