கண்டி தேசிய வைத்தியசாலையில் நடைபாதையில் நோயாளர் தூங்க வேண்டிய நிலை

157 0
கண்டி தேசிய வைத்திய சாலையில் சில வார்ட்களில் நோயாளர் எண்ணிககை அளவுக்கும் அதிகமாகி உள்ளதுடன் போதியளவு படுக்கை வசதி இன்றி நோயாளர் நடைபாதையிலும் தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போது கண்டிப்பகுதியில் நிலவும் குளிர் காலநிலை காரணமாக தொய்வு, சளித் தொல்லை, தடிமல், காய்ச்சல் போன்ற வற்றால் பாதிக்கப்படும் அதிக நோயாளர்கள் வார்ட்களுக்கு அனுமதிக்கப்படுவதே இவ்வாறு நெரிசலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இருப்பினும் இது தொடரபாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலர் தெரிவித்தனர்.