ஜேர்மனியில் வேலையின்மை வீதம் சற்று அதிகரிப்பு

99 0

2024ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஜேர்மனியில் வேலையின்மை வீதம் சற்று அதிகரித்ததாக பெடரல் வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியில் வேலையின்மை வீதம் சற்று அதிகரிப்பு

2024ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தை ஒப்பிடும்போது, டிசம்பர் மாதத்தில் ஜேர்மனியில் வேலையின்மை வீதம் 0.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

 

அத்துடன், 2023 டிசம்பர் மாதத்தில் 5.7 சதவிகிதமாக இருந்த வேலையின்மை வீதம், 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 6.0 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் வேலையின்மை வீதம் அதிகரிப்பது வழக்கமான விடயம்தான் என பெடரல் வேலைவாய்ப்பு அலுவலகம் கூறினாலும், 2024இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி தொழிலாளர் சந்தையில் பாதிப்புகளை ஏற்படுத்தியதை மறுக்கமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.