பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிணையில் விடுதலை

165 0

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனியை 05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (03) உத்தரவிட்டுள்ளது.

மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனி, படகொட பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்றைய தினம் காலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.