சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

75 0

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  புறநகர்  பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய  இருவரை சம்மாந்துறை  பொலிஸார்  வியாழக்கிழமை (02)  மாலை  கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நீண்ட காலமாக  ஐஸ் போதைப் பொருட்களை  பொதி செய்து வியாபாரம் செய்து வந்த இரு சந்தேக நபர்களே கைதாகினர்.

கைதான  27 மற்றும்  40 வயதுடைய இரு  சந்தேக நபர்களும் கருவாட்டுக்கல், உடங்கா பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வசமிருந்து  4,200 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள்  பொலிஸாரல் கைப்பற்றப்பட்டன.

அத்துடன்   சம்மாந்துறை  பொலிஸார் சந்தேக நபர்கள் உள்ளிட்ட  சான்றுப்பொருட்களை  சட்ட நடவடிக்கைக்காக  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்தனர்.