அதன் பிரகாரம் தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களத்திடம் நிவாரணம் மற்றும் தலையீடு கோரி பொது மக்களால் சமர்ப்பிக்கப்படும் மகஜர்கள் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுப்பதற்காக 0707227877 என்ற வட்ஸ் அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொழில் திணைக்களத்தின் பிரதான நோக்கம் தொழில் அமைதியை பேணிச்செல்வது மற்றும் அதனை மேலும் பலப்படுத்துவதாகும். அத்துடன் இந்த நாட்டின் தனியார் மற்றும் அரச சார்பு துறை ஊழியர்களின் சேவை பிரச்சினைகளுக்கு விரைவாக நிவாரணம் பெற்றுக்கொடுப்பதாகும்.
அதன் பிரகாரம் பாெது மக்களின் காலம் மற்றும் செலவை கட்டுப்படுத்தல் மற்றும் விரைவாக பதில் அளிப்பதை மேன்படுத்துவதற்கும் அதிகாரிகளின் கால நேரத்தை முகாமைத்துவம் செய்துகொள்ளும் வசதிக்காகவும் இந்த வட்ஸ் அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொழில் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனியார் மற்றும் அரச சார்பு துறையின் ஊழியர்களின் சேவைகளை மிகவும் விரைவாக மேற்கொள்ளவதற்காக தொழில் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.