நீர் நிலையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு !

121 0

கொழும்பு – புறக்கோட்டை மிதக்கும் சந்தைப் பகுதியில் உள்ள நீர் நிலையில் இருந்து இன்று வியாழக்கிழமை (02)  அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த நீர் நிலையில் சடலமொன்று மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.